>

ad

ஒம்புஸ்ட்மன் அலுவலகத்தின் கடமைகளும் பணிகளும்

  பாராளுமன்றமானது, நிருவாத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்சுமான்) அலுவலகத்தை தாபித்தல் வேண்டும் என இலங்கை குடியரசின் அரசியலமைப்பின் 156 ஆம் உறுப்புரை குறித்துரைக்கிறது. அரசாங்க அலுவலர்கள் மற்றும் அரசாங்க கூட்டுத்தாபனங்கள் உள்ளூராட்சி அதிகாரசபை மற்றும் அதேபோன்ற ஏனைய நிறுவனங்களில் கடமையாற்றும் அலுவலர்கள் தமது கடமைகளை நிறைவேற்றும் போது அவர்களால் மீறப்படும் அடிப்படை

உரிமைகள் மீறல் அல்லது ஏனைய அநீதிகள் தொடர்பிலான முறைப்பாடுகளை அல்லது சார்த்துரைகளை புலனாய்வு செய்து அறிக்கையிடும் பொறுப்பை இப்பதவி கொண்டுள்ளது. 

அதற்கமைய 1981 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிர்வாத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டம் உருவாக்கப்பட்டு ஒம்புட்சுமான் அலுவலகம் தாபிக்கப்பட்டது அச்சட்டத்தில் ஒம்புட்சுமானின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் தொழிற்பாடுகள் விபரிக்கப்பட்டு வரையறுக்கப்படுள்ளன. அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து அடிப்படை உரிமைகள் மீறல்கள் அல்லது ஏனைய அநீதிகள் தொடர்பான முறைப்பாடுகளை நேரடியாக ஒம்புட்சுமானிடம் சமர்ப்பிப்பதற்கு ஏற்புடையதாக 1994 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் மேலே கூறப்பட்ட சட்டம் திருத்தப்பட்டது. 

தhக்கல் செய்யப்பட்ட முறைப்பாடுகளை புலனாய்வு செய்வதற்கும் விசாரணை செய்வதற்கும் அத்துடன் முறையீட்டுக்கு உள்ளான அரசாங்க அலுவலரின் தீர்மானம், பரிந்துரை செயற்பாடு அல்லது தவிர்ப்பு சட்டத்திற்கு எதிரானதா, அநீதியானதா, அடக்கு முறையானதா அல்லது பாகுபாடானதா அல்லது முறையற்ற தற்றுணிவு பிரயோகமா தீர்மானிப்பதற்கு ஒம்புட்சுமான் பணிக்கப்படுகிறார். அரசாங்க அலுவலரொருவரால் ஒரு நபரின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என அல்லது அத்தகைய அலுவலரினால் அநீதி ஏற்பட்டுள்ளது என புலனாய்வின் பின்னர் ஒம்புட்சுமான் திருப்தியடையுமிடத்து, அதற்கமைய அவர் தீர்மானம் எடுப்பார் பாதிக்கப்பட்ட நபருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் ஒம்புட்சுமான் சம்பந்தப்பட்ட அரசாங்க அலுவலரின் செயற்பாடு தொடர்பில் பரிந்துரை வழங்கலாம், மீள் பரிசீலனை செய்யலாம், சீர்படுத்தலாம், இரத்து செய்யலாம் அல்லது மாற்றலாம் அத்துடன் அரசாங்க அலுவலர் சார்பாக நிறுவன தலைவரிடம் குறிப்பிட்ட காலப்பகுதியினுள் பரிந்துரை அமுலுக்கு வரும்வகையில் அவரினால் முன்மொழியப்படும் படிமுறைகளை அறிவிக்குமாறு கோரலாம்.

இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர்நாயகமாக பதவிவகித்த திரு. சாம் விஜயசிங்க என்பவரே குடியரசின் முதலாவது ஒம்புட்சுமான். இவர் சமர்ப்பித்த 1984 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் பின்வரும் முறையில் ஒம்புட்சுமானின் கடமைகளையும் தொழிற்பாடுகளையும் விபரிக்கின்றார்.


பணி
"ஓம்புட்சுமான் பாராளுமன்றத்தின் ஓர் அதிகாரி, பாராளுமன்றம் பாரம்பரியமாகச் செய்யும் பணியை நிறைவேற்றுவதே அவரது முக்கிய பொறுப்பு அதாவது தனிநபர்களின் குறைபாடுகளுக்கு நிவாரணமளித்தலாகும். குறிப்பிட்ட குறைபாடுகளுக்கு நிவாரணமளிப்பதற்குப் பதிலாக தற்போது
பாராளுமன்றம் பொதுவான சட்டங்களை உருவாக்குவதில் தனது நேரத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகிறது. அதிகாரவர்க்கத்துடனான தொடர்புகளில் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு பரிகாரமளிக்கும் ஒம்புட்சுமானிடமும் நீதிமன்றத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது பாராளுமன்றம், நீதிமன்றங்கள் ஒம்புட்சுமான் ஆகிய மூன்று நிறுவனங்களும் அதிக கடமைகளுக்குள்ளாக்கப்படுவதால் இவற்றில் அகத்தொடர்புத் தேவை
ஆராயப்படவேண்டும் மக்களும் அரசாங்கமும் அகத்தொடர்புறும் இடத்திலேயே ஓம்புட்சுமானின் பங்களிப்பு இலங்கையில் தேவையாகின்றது. அதனால் ஒம்புட்சுமானின் அரசியல் சட்ட நிலை மிகவும் சுவாரசியமுள்ளதாகின்றது' 

அதற்கமைய, அரசியலமைப்பில் குறித்துரைக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பளித்தல், அரசாங்க மற்றும் அதையொத்த ஏனைய நிறுவனங்களில் உள்ள அலுவலர்களின் செயற்பாடுகள் மூலம் ஏற்படும் ஏனைய அநீதிகளிலிருந்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்பன ஒம்புட்சுமானின் உயர்ந்த கடமையாக உள்ளது என்பது தெளிவாகிறது. மக்களுடைய உரிமைகளை பாதுகாக்கும் அதேவேளை அரசியலமைப்பின் உறுப்புரைகளில் மற்றும் சட்டவாக்கத்தை சட்டமாக்கும் ஏற்பாடுகள் மற்றும் அதனுடைய ஒழுங்கு விதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளினால் வெளியிடப்படும் பல்வேறுவகையான சுற்றறிக்கைகளில் உள்ளடக்கிய விதிகள் தொடர்பான விடயங்கள் சார்பாகவும் அரசாங்கத்தின் நிர்வாக கொள்கை முறையாக அமுல்படுத்தப்படுகிறதா என உறுதிப்படுத்தல் ஒம்புட்சுமானின் கடமையாகும்

ஒம்புட்ஸ்மன் குறித்த முதல் பக்கத்திற்கு செல்ல CLICK HERE