>

ad

ஒம்புட்சுமானால் புலனாய்வு செய்யப்படாத முறைப்பாடுகள்

 

  1. தொழில்கள்/வீடுகளுக்கான கோரிக்கைகள். ( சட்டத்தின் பிரிவு 10 (2).
  2. பொதுமக்கள் பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் தொடர்புபட்ட விடயங்கள். (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (1) .
  3. ஆயுதப்படைகள், பொலிஸ் படைகள் அல்லது பொதுமக்கள் ஒழுங்கைப் பேணுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள ஏனைய படைகளில் உறுப்பினரொருவரின் சேவை நியதிகள் நிபந்தனைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (111)
  4. நீதிமன்றத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானமொன்று அல்லது நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள விடயங்கள் ( சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (​iv) ).
  5. அரசாங்க அலுவலர்களின் நியமனங்கள், இடமாற்றங்கள், பதவி விலகல்கள் அல்லது ஒழுக்காற்று கட்டுப்பாடுகள் தொடர்பிலான முறைப்பாடுகள். (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (v).
  6. கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் கணக்காய்வு செய்தல் தொடர்பிற்குட்பட்ட, உட்படுகின்ற விடயங்கள் தொடர்பிலான முறைப்பாடுகள். (சட்டத்தின் பிரிவு 11 (ஆ) (vi)
  7. முறைப்பாட்டாளர் முறைபாடு செய்வதில் காலதாமதம் ஏற்படுதல் (நியாயமற்ற காலதாமதம்) (சட்டத்தின் பிரிவு 13 (1) (இ) ).
  8. பொதுகொள்கைகள் அல்லது அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பிலான விடயங்கள்.
  9. தேர்தல் ஆணையாளரின் தேர்தல் நடவடிக்கைகள்.
  10. சொந்த கம்பனிகள் உள்ளடங்கலாக சொந்த குழுக்களுக்கிடையிலான பிரச்சனைகள் தொடர்பிலான முறைப்பாடுகள்
  11. அநாமோதைய அல்லது கையொப்பமிடப்படாத முறைப்பாடுகள்.

ஒம்புட்ஸ்மன் குறித்த முதல் பக்கத்திற்கு செல்ல CLICK HERE