ஒம்புஸ்ட்மன் காரியாலயத்தினால் தீர்த்துவைக்கப்பட்ட சில பிரச்சினைகள் தொடர்பான சுருக்கம்.
கோ. இலக்கம்- OMB/2/4/4711
பெயர்- திரு. எஸ்.ஜி.சி.கீர்த்திரத்ன
இலங்கை துறைமுக அதிகாரசபையில் விவித பணிகள் உதவியாளராக பணியாற்றுகின்ற திரு எஸ் ஜி.சி.கீர்த்திரத்ன அவர்கள் தான் கட்டுப்பாட்டாளர் (செயற்பாடுகள்) பதவியில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான எழுத்து பரீட்சையில் உயர்ந்த புள்ளிகளைப் பெற்றிருந்தும், மேற்கூறப்பட்ட பதவிக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளித்திருந்தும் தன்னை இப்பதவிக்கு தெரிவு செய்யவில்லை என முறையிட்டுள்ளார் மேலும் அவர் செயற்பாட்டு பிரிவில் சேவையாற்றியிருந்ததால் தனக்கு உரித்தான புள்ளிகளை நேர்முக பரீட்சை சபை கருத்தில்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார். எனவே இது சம்பந்தமாக துறைமுக அதிகாரசபையின் மனித வள பிரதம முகாமையாளரிடமிருந்து அறிக்கைகள் கோரப்பட்டதற்கு அமைய அவர் நேர்முகப் பரீட்சையில் ஒதுக்கப்பட்ட புள்ளிகள் தொடர்பான விபரத்தை எமக்கு
சமர்ப்பித்தார். அதன்பின்னர் செயல்பாட்டு பிரிவில் எவ்வித விசேட பங்களிப்பையும் வழங்காத திரு சி.திலகரட்ணவுக்கு புள்ளிகள் வழங்கி, செயல்பாட்டுப் பிரிவில் தனது சேவையை வழங்கிய முறைப்பாட்டாளருக்கு ஏன் புள்ளிகள் வழங்கவில்லை என துறைமுக அதிகாரசபையின் தவிசாளரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் நேர்முகப்பரீட்சை முடிவுற்று 1 வருடங்களின் பின்னர் இவ்வலுவலகத்தின் தலையீட்டின் மூலம் 2019.07.11 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வண்ணம் கட்டுப்பாட்டாளர் (செயற்பாடு) பதவியில் முறைப்பாட்டாளரை நியமிப்பதற்கு தேவையான சேவை அனுபவம் உள்ளமையால் அவருக்கு 12 புள்ளிகள் வழங்கி பதவியில் அமர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன
கோ. இலக்கம். OMB/P/2/1/169
பெயர்- திருமதி.ஏ.ஏ.தயாவதி அழகேந்திரா
1991,10,16 ஆம் திகதி முன்னாள் ஒம்புட்சுமான் நீதிபதி எல் ஏச்.டீ அல்விஸ் என்பவரால வழங்கப்பட்ட பரிந்துரையை தனமல்வில பிரதேச சபை நிறைவேற்றவில்லை என திருமதி ஏ.ஏ தயாவதி அழகேந்திரா முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார் மேலே கூறப்பட்ட காணியை உடவளவை தேசிய பூங்கா பயன்பாட்டிற்காக அரசாங்கம் சுவிகரித்துள்ளதால் முறைப்பாட்டாளர் தனது வதிவிடத்தையும் தனது 40 ஏக்கர் பண்ணையையும் இழந்துள்ளார் தனமல்வில பிரதேச செயலாளரிடமிருந்து இப்பிரச்சனை தொடர்பாக அறிக்கை கோரப்பட்ட போது பிரதேச சபை அவருக்கு மாற்று காணி வழங்குவதற்கு சாத்தியம் உள்ளது எனவும் அல்லது நட்ட ஈடு வழங்க முடியும் எனவும் அறிவித்திருந்தது அதன்பின்னர் முறைப்பாட்டாளர் மாற்று காணி அல்லது நட்ட ஈடு தொடர்பில் அவரது இணக்கம் கோரப்பட்டது. அதற்கு
முறைப்பாட்டாளர் இரத்தினபுரி என்னும் இடத்தில் காணி ஒதுக்கி தரும்படியும் அவ்வாறு சாத்தியமற்றிருப்பின் நட்ட ஈடு தருமாறு கோரியிருந்தார் அதற்கமைய பிரதேச செயலாகத்திற்கு இரத்தினபுரி என்னும் இடத்தில் பொருத்தமான காணி ஒதுக்குவது சாத்தியமில்லாததால் அரசாங்க
மதிப்பீட்டு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் நட்டஈடு தருமாறு பிரதேச செயலாளரிடம் கோரிக்கையிடும்படி முறைப்பாட்டாளர் அறிவுறுத்தப்பட்டார்
கோ. இலக்கம்- OMB/P/2/8/2412
பெயர்- திரு.கே.எம்.விக்ரமசிங்க
இரண்டு தலைமுறையாக இரத்தோட்டை கண்சரபொலவில் உள்ள வதிவாளர்களினால் பாவிக்கப்பட்டு வந்த மயான பூமியில் இரத்தோட்டை பிரதேச சபை அதிகாரிகளினால் கட்டடமொன்று கட்டப்படுவதாக திரு கே எம் விக்கிரமசிங்க பொது முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார் அக்காணியை மயான பூமியாக பயன்படுத்துவதற்கு அவர்களை அனுமதிக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். அக்காணியில் கட்டடமொன்று கட்டப்படுவதால் அக்கிராமத்தில் முறைப்பாட்டாளர் உட்பட ஒரு பிரிவு மக்களுக்கு அந்நிலத்தை மயான பூமியாக பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் அக்காணியில் மிகுதி பகுதியை பூமியாக பயன்படுத்த வேறு சில மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை எமது அவதானத்திற்கு வந்துள்ளது. எனவே எதிர்காலங்களில் மக்களிடையே காட்டப்படும் பாகுபாடுகளை தவிர்ப்பதற்காக பிரதேச சபை சட்டத்தின் கீழ் கூறப்பட்ட மயான பூமிக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரியான பிரதேசசபை செயலாளருக்கு அவசியமான பரிந்துரைகள் வழங்கப்பட்டன. அதற்கமைய எவ்வித பாகுபாடுகளுமின்றி கண்சரபொல வதிவாளர்களும் அவ்விடத்தை பொதுமயானமாக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு இவ்வலுவலகத்தால் வழங்கப்பட்ட பரிந்துரையை அமுல்படுத்துவதற்கு பிரதேசசபை இணக்கம் தெரிவித்துள்ளது மயான
கோ.இலக்கம் - OMB/P/2/8/2312
பெயர்- திரு.எஸ்.அபேகுணசேகர
திரு அபேகுணசேகரக்கு எதிராக ஒழுக்காற்று அதிகாரிகள் அவருக்கு ஒழுக்காற்று தண்டனையாக அவருக்கு உரித்துடைய பணிக்கொடையிலிருந்து 01 வீதத்தை கழிப்பதாகவும் அவர் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகைக்காக அவருடைய பணிக் கொடையிலிருந்து 50 வீதத்தை பெற்றுக் கொள்வது எனவும் ஒழுக்காற்று விசாரணையில் தீர்மானம் எடுக்கப்பட்டது மேலே கூறப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக ஓய்வூதியப் பிரமாணக்குறிப்பின் பிரிவு 12 இன் கீழ் அரசாங்க நிர்வாக அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மேலே கூறப்பட்ட தீர்மானத்தை மாற்றி அவரது மாதாந்த ஓய்வூதியத்திலிருந்து 2 வீதத்தை கழிப்பதுடன் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முழுத்தொகையும் அவரது பணிக்கொடையிலிருந்து அல்லது ஓய்வூதியத்திலிருந்து மீளபெறப்படல் வேண்டும் என்னும் அதிகரித்த தண்டனையை வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டது.
எனவே முறையீட்டாளர் இந்த மேல் மனு குழுவினால் வழங்கப்பட்ட அதிகரித்த தண்டனை நியாயமானதல்ல என முறைப்பாடு செய்துள்ளார் ஒம்புட்சுமானின் தலையீட்டின் மூலம் அதிகரித்த தண்டனையை வழங்கிய பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு பின்னர் பதவி வகித்த செயலாளரிடம் அதிகரித்த தண்டனைக்கு எதிராக அவருடைய மாதாந்த ஓய்வூதியத்திலிருந்து 2 வீதம் கழிப்பதுடன் மாதாந்த ஓய்வூதியத்திலிருந்து 0.5 வீதம் மட்டுமே அறவிட தீர்மானம் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது அத்தகைய அவருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியத்தை தயாரிக்கவும் வழங்கவும்
ஓய்வூதிய திணைக்களம் நடவடிக்கை டுத்துள்ளது
கோ. இலக்கம் - OMB/P/2/7/435
பெயர்- திரு.பி.வி.சந்திரதாச
இம்முறைப்பாட்டடாளர் அவரது உடல் நலக்குறைவால் தனது சேவையிலிருந்து ஓய்வூபெற்று 22 மாத காலங்கள் கடந்தும் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை என முறைப்பாடு செய்துள்ளார் இவ்வலுவலகத்தின் தலையீட்டால் நிலுவைகளுடன் அவரது ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது
கோ.இலக்கம் - OMB/P/2/10/1314
பெயர்- திரு.எம்.ஆர்.என்.என்.விஜயசிங்க
இம்முறைப்பாட்டாளர் தனது மகள் புலமை பரீட்சையில் 164 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தும் தனது மகளை பின்னவல மத்திய கல்லூரியில் அனுமதி வழங்கவில்லை என முறைப்பாடு செய்துள்ளார் அவரது மகள் இப்பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் வேளையில் தனது தந்தை வேறுநாட்டில் கடமையிலிருந்த போது மரணித்துள்ளார் தந்தை மரணமடைந்தது 2015 யூலை 28 ஆம் திகதியன்று ஆகும் இவரது இறுதிக்கிரிகை 2015 செப்டெம்பர் 15 ஆம் திகதியன்று நடைபெற்றது. இக்காலப்பகுதியில் இச்சிறுமி தனது பரீட்சைக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும் காலமாக இருந்தது. இச்சிறுமி பாடசாலையில் அனுமதிக்காதது தொடர்பில் கேபின்னவல மத்திய கல்லூரி அதிபரிடமிருந்து அறிக்கை கோரப்பட்டது. இவ்விசாரணைக்காக கல்வி அமைச்சின் அலுவலர்களும் இவ்வலுவலகத்திற்கு சமுகமளித்திருந்தார்கள். இவ்விசாரணையில் இப்பாடசாலையில் அனுமதிப்பதற்கு தேவையான புள்ளிகளை பெற்றிருக்காத மாணவி கிகான் அஞ்சனா இப்பாடசாலையில் அனுமதியை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. அதற்கமைய இம்மாணவிக்கு பாகுபாடு காட்டப்பட்டமை மற்றும் இம்மாணவியின் தந்தை பரீட்சை நடைபெறும் சமயத்தில் மரணமடைந்தமை என்பவற்றை கருத்தில் கொண்டு இப்பாடசாலையில் இம்மாணவியை அனுமதிக்குமாறு பரிந்துரை வழங்கப்பட்டது. அப்பரிந்துரைக்கு அமைய அம்மாணவி 2019 ஆம் ஆண்டில் 9 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கோ இலக்கம் - OMB/P/2/10/1426
பெயர்- திரு.கே.கே.பி.நிஷாந்த
2019.01.01 ஆம் திகதி செயல்வலுப்பெறும் வண்ணம் முறைப்பாட்டாளர் குருநாகல் வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றிருந்ததன் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு குருநாகல் மலியதேவ மகளிர் பாடசாலையில் வகுப்பு இற்கு முறைப்பாட்டாளரின் மகளை அனுமதிப்பதற்காக விண்ணப்பம் அனுப்பப்பட்டது. விண்ணப்பம் சமர்ப்பித்த போது இடமாற்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே விசாரணை மேற்கொண்ட போது அவர் குருநாகல் வைத்தியசாலைக்கு அறிக்கையிடாததால் நேர்முக பரீட்சைக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை என தெரிய வந்தது. தம்பதெனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாகுறையினால் இவ்வைத்தியருக்கு பதிலால் வரும்வரை அவர் அங்கு சேவையாற்ற வேண்டியிருந்தது. எனவே இருகுழுக்களும் இவ்வலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முறைப்பாட்டாளர் குருநாகல் வைத்தியசாலையில் அறிக்கையிட தாமதமானது அவருடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயமாக கருதப்பட்டதுடன் அரசாங்க சேவையில் வைத்திய சேவையானது அவசர சேவையாக கருதப்பட்டு 2020 ஆம் ஆண்டு குருநாகல் மலியதேவ மகளிர்
பாடசாலையில் வகுப்பு 2 இல் முறைப்பாட்டாளரின் மகளை அனுமதிக்குமாறு பரிந்துரை வழங்கப்பட்டது. இப்பரிந்துரையை கல்வி அமைச்சும் ஏற்றுக் கொண்டு அச்சிறுமியை அப்பாடசாலையில் கல்வி கற்பதற்கு அனுமதித்துள்ளது.
கோ.இலக்கம் - OMB/P/2/10/1516
பெயர்-திருமதி.வி.ஆர்.அனோமா மதுபாசினி
2019 ஆம் ஆண்டில் கா சங்கமித்தா பெண்கள் பாடசாலையில் வகுப்ப 1 இல் தனது மகளை அனுமதிப்பதற்கு மறுத்துள்ளார்கள் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முறைப்பாட்டாளர் அருகில் உள்ள வதிவிடம் என்னும் அடிப்படையில் இப்பாடசாலைக்கு விண்ணப்பித்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது முறைப்பாட்டாளரின் வதிவிடத்தை விட தூரத்திலுள்ள இரண்டு மாணவர்கள் இப்பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தெரியவந்துள்ளது. இவ்வலுவலகத்தின் நிர்வாக அலுவலரும் விடய எழுதுநரும் அவ்வீடுகளுக்கும் பாடசாலைக்கும் சென்று
ஆராய்ந்த போது அவர்கள் ஐ-பாட் பயன்படுத்தி கூகிள் தேடல் மூலமாக தூரத்தை அளந்துள்ளார்கள். தூரங்கள் சரியானமுறையில் அளக்கப்பட்டு அப்பாடசாலைக்கு அச்சிறுமியை அனுமதிப்பதற்கு பரிந்துரை வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன் கா/சங்கமித்தா பெண்கள்
பாடசாலையில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டார்.
கோ.இலக்கம் - OMB/P2/1/295
பெயர்- திருமதி.நந்திக லக்மாலி
முறையீட்டாளர் தனது வீட்டை மேலும் விரிவுபடுத்துவதற்காக கடனொன்றை பெற்றுக்கொள்ளும் பொருட்டு விண்ணப்பிப்பதற்காக தெரு வரிச் சான்றிதழின் பிரதியொன்றை வழங்குமாறு பாணந்துறை நகரசபையிடம் கோரிய போது அவற்றை வழங்க அச்சபை மறுத்துள்ளதாக முறையிட்டுள்ளார். பொது ஆவணமொன்றான தெரு வரிச் சான்றிதழை பெற்றுக்கொள்ளும் உரிமை தொடர்பில் இவ்வலுலகம் அவதானித்துள்ளது. அத்தகைய உரிமையை வழங்க அரசாங்க அலுவலர் மறுத்து சட்டத்தை மீறமுடியாது. அதற்கமைய மேலே கூறப்பட்ட ஆவணப்பிரதியை வழங்குமாறு எம்மால் பரிந்துரை வழங்கப்பட்டது.
மேலே கூறப்பட்ட உரிமையை அவமரியாதை செய்த சிரேட்ட அரசாங்க அலுவலரான பாணந்துறை நகரசபையின் செயலாளர் எமது பரிந்துரையை பின்பற்றவில்லை. அத்துடன் உள்ளூராட்சி திணைக்களத்தின் சட்ட பிரிவில் இது தொடர்பில் விளக்கம் கோரியுள்ளார். அவர்கள் எமது பரிந்துரைக்கு இணங்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள். இறுதியாக எமது கோரிக்கைக்கு அமைவாக கோரப்பட்ட தெரு வரி சான்றிதழின் பிரதி முறைப்பாட்டாளருக்கு வழங்கப்பட்டது.
கோ.இலக்கம் - OMB/P/2/7/658
பெயர்- திரு.டபிள்யூ.எம்.பிரேமதிலக
முறைப்பாட்டாளர் தான் ஓய்வூபெற்று 5 வருடங்கள் கடந்தும் திருத்தப்பட்ட அவருடைய ஓய்வூதியம் அவருக்கு வழங்கப்படவில்லை என முறையிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட திகதியிலிருந்து இரண்டு மாத
காலங்களுக்குள் முறைப்பாட்டாளர் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளார்கள்.
எமது அலுவலகத்தின் தலையீட்டின் மூலம் நிவாரணங்களை பெற்றுக்கொண்ட முறைப்பாட்டாளர்களின் பாராட்டுக் கடிதங்களின் பிரதிகள் என்பபற்றைப் கீழுள்ள லிங்குகளில் பார்வையிடலாம்
ஒம்புட்ஸ்மன் குறித்த முதல் பக்கத்திற்கு செல்ல CLICK HERE