ஒம்புஸ்ட்மன் காரியாயத்திற்கு கிடைக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பில் பின்பற்றப்படும் நடவடிக்கை முறைகள்
முறைப்பாட்டின் இயல்புக்கு ஏற்ப தாமதமின்று குறைதீர்வை வழங்குவதற்கு பின்வரும் முறையில் புலனாய்வை மேற்கொள்ளுவார்.
- முதல்படியாக கிடைக்கபெற்ற முறைப்பாடொன்று நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் எல்லைக்குள் உள்ளடங்குகிறதா என தீர்மானம் எடுத்தல் வேண்டும்.
- அம்முறைப்பாடில் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் இவ்வலுவலக எல்லைக்குள் உள்ளடங்குமானால் அவ்விடயம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு எதிர்வாதியிடமிருந்து அறிக்கை கோரப்படும். வழமையாக ஏற்புடைய அறிக்கை சமர்ப்பிப்பதற்கு இரண்டு கிழமைகள் வழங்கப்படும்.
- அறிக்கையில் காணப்படும் விடயங்களை கவனமாக அவதானத்தில் கொண்டு அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். அறிக்கைகள் கோரப்பட்ட பின்னர் இழைக்கப்பட்ட அநீதிக்கான காரணம் சரிப்படுத்தப்பட்டால் முறைப்பாட்டாளருக்கு இவ்விடயம் உடனடியாக அறிவுறுத்தப்படும். அவ்வாறு சரிப்படுத்தப்படாதுவிட்டால், தேவைப்பட்டவாறு மேலும் கடிதங்கள் மூலம் விசாரணைகள் நடாத்தப்படும்.
- இவ்வாறு கடிதப்பரிமாற்றம் மூலம் முறைப்பாட்டாளருக்கு குறைதீர்வு வழங்கி இவ்வலுவலகத்திற்கு அலுவலர்கள் சமுகமளித்தலை இயலுமானவரையில் குறைக்கும் வகையில் சாத்தியமான முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
- முறைப்பாட்டாளருக்கு அநீதி இழைக்கப்படவில்லை என கடித தொடர்பில் எண்பிக்கப்பட்டால், இவ்விடயம் அதிகாரிகளுக்கும் முறைப்பாட்டாளருக்கும் அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- கடிதம் அனுப்புதல் மூலம் தீர்மானமொன்று எடுப்பது கடினமாக காணப்படுமிடத்து சகல குழுக்களுக்கும் விசாரணைக்காக அழைப்பாணை விடுக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்படும்.
- ஒம்புட்சுமானால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்/பரிந்துரைகள்/ஆலோசனைகள் முறைப்பாட்டாளருக்கும் ஏற்புடைய அதிகாரிகளுக்கும் எழுத்தில் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஒம்புட்சுமனால் எடுக்கப்பட்ட தீர்மானம்/பரிந்துரை/ஆலோசனையை குறிப்பிட்ட காலத்திற்குள் பிரதிவாதியை அமுல்படுத்துமாறு ஒம்புட்சுமான் கோருவார்.
- நிறுவனத்தலைவர் (அதிகாரம் பெற்ற அலுவலர்) கூறப்பட்ட பரிந்துரையை அமுல்படுதாவிட்டால், அவ்வாறு குறித்துரைக்கப்பட்ட காலத்தினுள், போதியதாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையாயின், ஏற்புடைய நிறுவனத்தலைவரினால் செய்யப்பட்ட அவதானிப்புக்கள் ஏதும் இருப்பின் அவற்றை சீர்தூக்கி பார்த்த பின்னர் ஒம்புட்சுமான் தமது பரிந்துரையுடன் இறுதி அறிக்கையை 1994 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க திருத்த சட்டத்தில் கூறப்பட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அதிமேதகு சனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிப்பார்.
- சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய முறைப்பாட்டாளரொருவர் சட்டத்தரணியின் அல்லது பாதுகாப்பு அதிகாரியின் உதவியைப் பெறுதல் அனுமதிக்கப்படமாட்டாது. எவ்வாறாயினும் முறைப்பாட்டாளர் உடல் அல்லது இனங்காணக்கூடிய தளர்ச்சிக்கு உட்பட்டிருப்பின் தனது உதவியாளரின், உறவினரின் அல்லது ஆதரிப்பாளரின் உதவியை ஒம்புட்சுமானின் விருப்பத்துடன் பெற்றுக்கொள்ளலாம்.
- முறைப்பாட்டின் இயல்பு மற்றும் பிரதிவாதியினால் வழங்கப்படும் பதில் என்பவற்றுக்கு அமையவே குறைதீர்வு வழங்கும் கால அளவு அமைந்திருக்கும். பிரதிவாதி தாமதமின்றி அறிக்கை சமர்ப்பிப்பாரானால் இடருற்றவருக்கு விரைவில் குறைதீர்வு வழங்குவதற்கு உதவியாக இருக்கும். எவ்வாறாயினும் முறைப்பாட்டை கோவையிட்ட திகதியிலிருந்து மூன்று மாத காலங்களினுள் பரிந்துரைகளை வழங்குவதற்கு முயற்சி எடுக்கப்படும். எனினும் முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட திகதியிலிருந்து ஒரு வருட காலத்தினுள் இறுதித் தீர்மானத்தைப் பெற்றுக்கொள்ள தீவிர முயற்சி எடுக்கப்படுகிறது.
(ஒம்புட்சுமான் அலுவலகம் வருடாந்த செயல்திறன் அறிக்கை -2019 இலிருந்து பெறப்பட்டது)
இவ்வலுவலகத்தால் பெறப்படும் ஒவ்வொரு முறைப்பாடும் ஓர் தனி பதிவேட்டில் பதியப்படுகிறது. ஒவ்வொரு முறைப்பாட்டுக்கும் விசேட இலக்கம் வழங்கப்படுகிறது. அதன் பின்னர் முறைப்பாடுகள் ஓய்வூதியம், விதவைகள் அநாதைகள், சம்பள முரண்பாடுகள் சம்பள உயர்வுகள், பதவி உயர்வுகள் காணி, அதிகாரமளிக்கப்படாத நிர்மாணங்கள் சேவை முடிவுறுத்தல், பதவியில் மீளஅமர்த்தல், பல்கலைக்கழக | பாடசாலை அனுமதி, அதிகார துஷ்பிரயோகம் என்பன போன்ற விடயங்களுக்கு அமைய வகுக்கப்படுகின்றன. அவை குறிப்பிட்ட விடயங்களாக ஒதுக்கப்பட்டு இவ்வலுவலகத்தின் அலுவலர்களால் நிர்வாகிக்கப்படுகிறன. அவ்வலுவலர்கள் அரசாங்கசேவையின் “அரசாங்க சேவை அலுவலர்" வகுதியினரை சேர்ந்தவர்களாகும் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டதும் அம்முறைபாடு ஏற்புடைய அரசாங்கசேவை அலுவலருக்கு (விடய எழுதுநர்) அனுப்பப்படும். அதன்பின்னர் அவர்கள் ஒவ்வொரு முறைப்பாட்டுக்கும் ஒரு கோவையை திறப்பார்கள் விடய தலைப்பு தெரிவானது அலுவலகத்தின் பிரதம அரசாங்க சேவை அலுவலரால் மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பிட்ட முறைபாடு தொடர்பில் கோவை திறக்கப்பட்டதும் முறைபாட்டில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை எழுதுநர் சுருக்கமாக குறிப்பு எழுதுவார். அதன்பின்னர் அவர் நிர்வாக அலுவலருடன் முறைப்பாடு தொடர்பான தன்மையை விவாதிப்பார் பின்னர் இருவரும் ஒம்புட்சுமானை சந்தித்து முறைப்பாடு தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பாக
அவருடைய ஆலோசனையையும் உதவியையும் பெற்றுக்கொள்வார்கள்,
மிகவும் முக்கியமான கலந்துரையாடல் ஒன்று நடைபெறும், அக்கலந்துரையாடலில் இணைக்கப்பட்ட ஏனைய ஆவணங்களுடன் பெறப்பட்ட முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்ட விடயத்தை ஒம்புட்சுமான் கவனமாக ஆராய்வார். மிகவும் முக்கியமான விடயமாக முறைபாடு / சார்த்துதல் ஒம்புட்சுமானின் நியாயாதிக்கத்திற்குள் அமைந்துள்ளதா என உறுதிப்படுத்துவதன் பொருட்டு ஆராயப்படும். இப்பிரச்சனை பற்றி தீர்மானிக்கும் போது நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் பிரிவுகள் 10, மற்றும் 11 இல் காணப்படும் விடயங்களை ஒம்புட்சுமான் கவனத்தில் கொள்வார். இம்முறைப்பாடு சட்டத்தின் எல்லைக்குள் இல்லாவிட்டால் இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாமைக்கான காரணங்களை உள்ளடக்கி முறைபாட்டாளருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்படும்
இம்மனு தொடர்பாக நடவடிக்கை தொடர்வதற்கு ஒம்புட்சுமான் தீர்மானிக்கும் போது ஒவ்வொரு முறைப்பாடுகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய படிமுறைகள் சார்பாக பொருத்தமான ஒழுங்குகளை மேற்கொள்ளுவார் முறைப்பாட்டாளரினால் கோரப்படும் நிவாரணம் மற்றும் யாருக்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது போன்ற மேலதிக தகவல்களை பெறுவது அவசியம் என ஒம்புட்சுமான் கருதுவாரானால், அவ்வகையான தகவல் மனுதாரரிடமிருந்து கோரப்படும். அதன்பின்னர் இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய தாமதமின்றி இவ்வழக்கை முடிவுறுத்துவதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது எனினும் இம்முயற்சி முறைப்பாட்டின் இயல்பில் தங்கியுள்ளது பொதுவாக இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டதும் எவ்வலுவலர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதோ அவ் அலுவலர்களை விட உயர் பதவியில் உள்ள அலுவலர்களிடமிருந்து கருத்தறிவிப்பு கோரப்படுகிறது
கருத்தறிவிப்பு அனுப்பப்பட்டதும் அதற்கு அவ்வதிகாரிகள் நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ள சந்தர்ப்பங்களும் உண்டு மாறாக சில சந்தர்ப்பங்களில் கருத்தறிவிப்பை பெற்றுக்கொள்வதற்கு பல நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பவேண்டியிருந்தது சில சந்தர்ப்பங்களில் ஒம்புட்சுமான் பல நினைவூட்டல் கடிதங்ளை அனுப்பியதன் பின்னரே சுமாரான எண்ணிக்கையிலான முறைப்பாடுகளுக்கு அர்த்தமுள்ள தீர்வகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சிலவேளை சாதாரண நடைமுறைகளுடாக ஒம்புட்சுமானால் நியாயமான தீர்மானத்தை எட்ட முடியாதுள்ள சந்தர்ப்பத்தில் குழுக்கள் இவ்வலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்படுகிறார்கள் என ஒவ்வொரு குழுக்களும் தமது வாதங்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கி முறையாக அவதானித்து விசாரணை நடாத்தப்படுகிறது. அடிப்படை உரிமை மீறல் அல்லது அநீதி ஏற்பட்டு ள்ளது நிரூபிக்கும் போதெல்லாம், ஒம்புட்சுமான் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்குவதற்கு முயற்சி செய்வார்.
அந்நடவடிக்கையின் மூலம் நியாயமான தீர்மானமொன்றை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அவ்விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும். ஒம்புட்சுமான் தனது சகல முயற்சிகளிலும் தீர்வு காண முடியாதுபோனால், அவர் அப்பிரச்சனை தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொண்டு
குறித்த காலப்பகுதிக்குள் அத்தீர்மானத்தை அமுல்படுத்துமாறு பிரதிவாதிக்கு அறிவிப்பார்
அக்குறித்த காலத்தினுள் எந்நடவடிக்கையும் மேற்கொள்ளாவிடின் ஒம்புட்சுமான் தனது அறிக்கையின் பிரதியொன்றை சனாதிபதிக்கு அனுப்புவதுடன் பாராளுமன்றத்திற்கும் பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு அனுப்பப்படும். ஒம்புட்சுமான் அலுவலகம் இதன்முன்னர் குறித்துரைத்த செயற்பாட்டை பின்பற்றுவதில் உறுதி கொண்டுள்ளது மேலே கூறப்பட்ட முறையில் மனுக்கள் தொடர்பிலான நடமுறைகளை மேற்கொண்டு
அதன்பின்னர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஒம்புட்ஸ்மன் குறித்த முதல் பக்கத்திற்கு செல்ல CLICK HERE