>

ad

அஸ்வெஸும நலன்புரி புதிய விண்ணப்பங்கள் விரைவில்

 தற்போது சமுர்த்தி நலன்களைப் பெறுகின்ற 1,280,000 குடும்பங்கள் அஸ்வெஸும நலன்புரி நலன்களுக்காக விண்ணப்பித்துள்ளதுடன், அவற்றில் 887,653 குடும்பங்கள் தகுதி அஸ்வெஸும நலன்புரி நலன்களுக்காக பெற்றுள்ளதாகவும், தற்போது சமுர்த்தி மானியம் பெறும் குடும்பங்களில் 393,094 குடும்பங்கள் அஸ்வெஸுமநலன்புரி திட்டத்திற்கு தகுதி பெறவில்லை என்பதுடன் அவர்களுக்கான சமூர்தி கொடுப்பனவுகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்பதாகவும்  இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 


இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.



20 லட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெஸும நலன்புரி நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதுடன்,  ஏற்கனவே நிவாரண உதவி பெற தகுதி பெறாதவர்னகள் சமர்ப்பித்த மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் விரைவில்  பரிசீலிக்கப்பட்டு, அது முடிந்ததும் புதிய விண்ணப்பங்களை ஏற்று 20  இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்வதற்கான இலக்கிளைப் பூர்த்தி செய்ய இருப்பதாக   அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


 

முதியோர், சிறுநீரகம்  பாதிக்கப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலன்புரி  உதவிகள் முன்னையதைப் போன்றே நடைபெறுவதாகவும்  உதவி பெறும் முதியோர் உதவித்தொகையை தபால் நிலையங்களிலும், சிறுநீரகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை பிரதேச  செயலாளர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.



தற்போது அஸ்வெஸும நலன்புரி நலன்களுக்காக  தெரிவானவர்கள்  விரைவில் வங்கிக் கணக்குகளைத் தொடங்குமாறும், அதற்காக பொது விடுமுறை நாட்களிலும் அரச வங்கிகள் திறந்திருக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். .