>

ad

பௌதீக விஞ்ஞான பாடத்துறை


இந்தப் பாடத்துறையில் கற்பதற்கு எதிர்பார்க்கும் மாணவர்கள் கீழே குறிப்பிடப்படும்
பாடங்களிலிருந்து மூன்று பாடங்களைத் தெரிவு செய்தல் வேண்டும்
1. இணைந்த கணிதம்
2. இரசாயனவியல்
3. பௌதிகவியல்
4. உயர் கணிதம்

மேற்குறிப்பிடப்படும் விதத்தில் பாடத்துறைகளின் கீழ் குறிப்பிட்ட பாடச்சேர்மானங்களைத் தெரிவு செய்தல் வேண்டும். ஆனால் குறிப்பிட்ட பாடசாலையில் போதிய எண்ணிக்கையிலான மாணவர்கள் காணப்படும் பட்சத்திலும் நேர சூசியை வழங்குவதற்கும் வசதிகளை ஏற்படுத்துவதற்கும் இயலுமான பாடங்களுக்கு மாத்திரம் தமக்கு விருப்பமான பாடங்களைக்
கொண்ட பாடச்சேர்மானத்தைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பினை மாணவர்களுக்கு வழங்க முடியும். ஆயினும், பாடங்களுக்கு இடையில் "அல்லது" எனக் குறிப்பிடப்பட்டிருப்பின் அதிலிருந்து ஒரு பாடத்தை மாத்திரம் தெரிவு செய்தல் வேண்டும். இவ்வாறு பாடங்களைத் தெரிவு செய்யும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழக அனுமதியின்போது தெரிவு செய்ய
வேண்டிய பாடநெறிகள் குறித்துப் பரந்த அறிவினைப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும்.

2. ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடத்துறைகளுடன் இணைந்தொழுகாத ஏனைய பாடச்சேர்மானங்களைத் தெரிவு செய்யும் பட்சத்தில், விண்ணப்பதாரிகள் "குறித்த பாடத்துறை ஒன்றில் அடங்காத" என அறிமுகப் படுத்தப்படுவதுடன், பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுகையில் "நாடளாவிய தரம்" (Island Rank) மற்றும் "மாவட்டத் தரம்" (District Rank) வெளியிடப்பட மாட்டாது.

3.  க.பொ.த. (உயர் தர) த்திற்கான சகல பாடங்களும் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலங்களில் கற்பிக்கப்படுவதுடன், கீழே காட்டப்பட்டுள்ள பாடங்களை ஆங்கில மொழியிலும் கற்பிக்க முடியும்.

1. உயிரியல்
2. பௌதீகவியல்
3. இரசாயனவியல்
4. இணைந்த கணிதம்
5, விவசாய விஞ்ஞானம்
6. கணக்கீடு
7. வணிகக் கல்வி
8. பொருளியல்
9. அரசியல் விஞ்ஞானம்
10. புவியியல்
இதற்கு மேலதிகமாக ஆங்கில மொழியில் வேறு பாடங்களைக் கற்பிப்பதற்கு தேவையாயின், மற்றும் இதற்கான வளங்கள் காணப்படுமாயின், கல்வி அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் கற்பிக்க முடியும்