இலங்கையின் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் உயர் கல்விக்காக புலமைப்ப ரிசில் வழங்குவதற்காக இந்திய உயர்ஸ்தானிகம் முன்வந்துள்ளது. க.பொ.த (உ/த) , தொழில்நுட்டபப் பாடநெறிகள் என்பன பயிலுகின்ற மாணவர்கள் இந்த புலமைப் பரிசிலினைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
க.பொ.த சா/த பரீட்சையில் 6 சித்திகளைப் பெற்றுள்ள 25 வயதுக்குக் குறைந்ந எவரும் மேற்படி புலமைப் பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப்படிவத்தினை இந்திய உயர் ஸ்தானிகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளதில் www.hcicolombo.gov.in பதிவிறக்கம் செய்யலாம். அல்லது நேரடியாகச் சென்று பெற்றுக் கொள்ளலாம் (பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் கீழெ தரப்பட்டுள்ளது.
சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகழ்ப் பிரதிகளுடன் பெற்றோரின் அண்மைய சம்பளப் படிவத்தினை இணைத்து தோட்ட அதிகாரியின் அத்தாட்சிக் கடிதத்துடன் கீழ்க்குறிப்பிடும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதி 2023.04.29 ஆகும்.